Friday, April 30, 2010

மின்வெட்டு சில மாதங்களுக்கு நீடிக்கும்: சென்னைக்கு மின்வெட்டு இல்லை




சென்னை : தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையால், பொதுமக்கள் புழுங்குகின்றனர். தடையற்ற மின்சாரம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள் நிலையில், 'தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலை சீரடைய, இன்னும் சில மாதங்கள் ஆகும். சென்னையில் மின்தடை இல்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.



முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியின் அளவு அதற்கு சமமாக இருக்கவில்லை. நினைத்த நேரத்தில் மின் உற்பத்தியை துவங்கிவிட முடியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சியை துவங்கியிருப்பார்களேயானால், தற்போது மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைத்திருக்கும். இந்த உண்மையை உணர்ந்து தான் தி.மு.க., அரசு கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பின், மின் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால், அதன் பயன் கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அப்போது நம் பற்றாக்குறை பிரச்னை தீரும். அத்தகைய தன்னிறைவு ஏற்படும் வரை, இப்போதுள்ள பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.



தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறுதொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்வினியோகம் செய்யப்படுகிறது. மின்வெட்டு என்பது இந்தப் பகுதிகளில் இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு பகல் நேரத்தில் மட்டும் சுழற்சி முறையில் மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவை 10 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரத்து 800 மெகாவாட். மின்சார வாரியம் மூலம் 9,800 மெகாவாட் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



மின்சாரத் தேவையைச் சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாத இறுதியில், காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படும்போது மின்வினியோகம் சீரடையும். எந்த அளவிற்கு இதை சமாளிக்க முடியுமோ, அந்த அளவிற்கு சமாளிக்க தமிழக அரசு தன்னால் முடிந்த வரை, அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களும் இந்த நிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Monday, April 19, 2010

'லெட்டர் பேடு' சர்ச்சையில் 'மாஜி' அமைச்சர்

ராமநாதபுரம் : அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலகத்தின் முகவரி அச்சிட்ட 'லெட்டர் பேடு' உபயோகிப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராகவும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் தற்போது உள்ளார். ராமநாதபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட, உள்ளூர் இதழ் ஒன்றில், இவரது வாழ்த்து மடல் இருந்தது. இதில் , தமிழக அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலக முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், '' அரசு 'லோகோ' வை பயன்படுத்துவதில் வரைமுறை உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் அதை பயன்படுத்த அனுமதியில்லை. சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அன்வர்ராஜாவிடம் கேட்ட போது,'' எனது பழைய லெட்டர் பேடில் எழுதி தந்ததை, அந்த இதழினர் அப்படியே பிரசுரித்துவிட்டனர். அதில் அரசு லோகோ வெளியிட்டது தவறுதான்,'' என்றார்.

Friday, April 16, 2010

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு: வானில் மாபெரும் சாம்பல் மண்டலம்-ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து

லண்டன்: ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து வானில் சாம்பல் தூசி மண்டலம் பரவியுள்ளதையடுத்து உலகம் முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் உலக அளவில் விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.ஐஸ்லாந்தின் அயாபியாபிளாயெர்குதுல் (ay-yah-FYAH'-plah-yer-kuh-duhl) பகுதியில் உள்ள பனி மலையில் உள்ள மாபெரும் எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு பல கி.மீ. பகுதிகளில் பரவியுள்ளது.மேலும் எரிமலைக் குழம்பால் உருகிய பனி மலைகளால் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.எரிமலை வெடித்தபோது கிளம்பிய சாம்பல் புகை வானில் பல கி.மீ. தூரத்துக்கு சீறியது. இந்தப் புகை மண்டலம் வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எரிமலை அமைந்துள்ள இடத்திலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டன் வானிலும் இந்த சாம்பல் பரவியது.இந்தப் புகையில் உள்ள சாம்பல் விமான என்ஜின்களையே செயலிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது என்பதால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து உள்பட வடக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, கனடாவில் சுமார் 8,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.அதே போல இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் உள்பட ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, வளைகுடா, ஆஸ்திரேலியா உள்பட ஏராளமான நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா-ஐரோப்பா இடையிலான பெரும்பாலான விமானங்கள் ரத்தாகிவிட்டன.இந்த சாம்பல் புகை மண்டலம் கலைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் கூட ஆகும் என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

Thursday, April 15, 2010

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.
நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.
ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.
ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).

ஆதி திராவிடர் நிலங்களை யார் அபகரித்தாலும் மீட்டெடுப்போம்: முதல்வர் கருணாநிதி உறுதி

ஜெகந்நாதன், பெரியார் ஒளி விருது பெற்ற கி.வீரமணி, காயிதே மில்லத் பிறை விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான், மறைந்த தேவநேயப் பாவாணர் சார்பில் செம்மொழி ஞ
சென்னை, ஏப்.14: ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அவற்றை மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த மறைமலை நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், "அம்பேத்கர் சுடர்' விருதைப் பெற்ற பிறகு, முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:
இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதுகள் தனிப்பட்ட விருதுகள் என்ற போதும், எல்லாமே "ஒளி'மயமான விருதுகள்; சிறப்பான விருதுகள்.
விருதுகளை வழங்கிய திருமாவளவன், இங்கே சில கோரிக்கைகளை வைத்தார்.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், அவை குறித்து எதுவும் அறிவிக்க இயலாது. ஆனால், எனது தலைமையில் 6}வது முறையாக ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம் என்று திருமாவளவன் கூறினார். அத்தகைய ஆட்சி அமையும் போது உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
அதற்கு முன்னதாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இவை இடம்பெறும்.
இங்கே பேசிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எனக்குப் பிடித்த கருத்தைச் சொன்னார்.
நீதிபதி ஒருவர், ஏழைகள் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி அவர்களை விரட்டியதாக அவர் தெரிவித்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு இன்னொன்றையும்
நினைவுபடுத்த விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் ஒருவர் சிறுதாவூரில் பஞ்சமி நிலங்களை அபகரித்து வீடு கட்டியதாகப் புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு, அந்தக் கமிஷன் தனது அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அது நீதிபதியாக இருந்தாலும், முன்னாள் முதல்வராக இருந்தாலும் அந்த நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பாயில் படுத்து உறங்க முடியாத நிலையில் உள்ளது என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த நிலை மாறுவதற்காகத் தான் தி.மு.க. பாடுபடுகிறது. அதற்காகத்தான் தி.மு.க.வோடு திருமாவளவன் கைகோர்த்திருக்கிறார். வெள்ளையர்களிடம் விடுதலைப் பெற்ற நாம், இதுபோன்ற சமூகப் பிரச்னைகளிலிருந்து நிச்சயம்
விடுதலை பெறுவோம் என்றார் கருணாநிதி.
விழாவுக்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:
வீரன் சுந்தரலிங்கம், அயோத்திதாசர் ஆகியோருக்கு அரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும்; காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க வேண்டும். அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்.
அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு "பெரியார் ஒளி' விருதும், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு "காமராஜர் கதிர்' விருதும், கவிஞர் அப்துல் ரகுமானுக்கு "காயிதே மில்லத் பிறை' விருதும், தமிழறிஞர் மறைந்த தேவநேயபாவாணர் சார்பில் அவரது மகன் மணிக்கு "செம்மொழி ஞாயிறு' விருதும், ஞான அலாய்சியஸýக்கு "அயோத்திதாசர் ஆதவன்' விருதும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருதை வழங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். உடன் (இடமிருந்து)
அயோத்திதாசர் - ஆதவன் விருது பெற்ற ஞான.அலாய்சியஸ், காமராசர் கதிர் விருது பெற்ற கிருஷ்ணம்மாள்

ஏப்ரல் 14: கேப்டன் டி.வி. ஒளிபரப்பு


சென்னை, ஏப். 11: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கேப்டன் டி.வி. வரும் ஏப்ரல் 14 முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டி.வி.யின் சோதனை ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாலை முதல் துவங்கியுள்ளது.
வரும் ஏப்ரல் 14 முதல் முழுமையான நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூர்வமான ஒளிபரப்பு தொடங்கும். மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை சிறந்த வல்லுநர்களின் உதவியுடன் உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை முன்னேற்றும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.கல்வி, பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு சிறப்பாக ஒளிபரப்பவுள்ளோம்.
இதுவரை எந்த சேனலும் செய்திராத வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தனித் தனியே ஒரு குழுவை அமைத்து செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம்.
வரும் மே 1 முதல் எங்கள் டி.வி.யின் செய்திகள் பாரபட்சமின்றி ஒளிபரப்பாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் கேப்டன் டி.வி.யின் இன்னொரு புதிய சேனலும் தனது ஒளிபரப்பைத் தொடங்கவுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் "கேப்டன் முரசு' என்ற வார இதழ் விரைவில் வெளியாகவுள்ளது.
கேப்டன் டி.வி. ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ்.

250 சேனல்களுடன் சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனம்

சென்னை, ஏப். 14: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஜாக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதை மு.க.அழகிரி சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கேபிள் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து சென்னையை மையமாக வைத்து இப் புதிய கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் உரிமத்தினை முறையாகப் பெற்றுள்ள இந்த கேபிள் நிறுவனம், சென்னையில் விரைவில் தங்களது வர்த்தக ஒளிபரப்பு சேவையைத் தொடங்கவுள்ளது. தயாநிதி அழகிரியும் ஜேக் கம்யூனிகேஷன்ûஸ சேர்ந்த ஜெயராமன் கமலேஷும் இப் புதிய கேபிள் நிறுவனத்தின் இயக்குநர்களாகச் செயல்படுவார்கள்.
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த எம்.எஸ்.ஓ. (ஙன்ப்ற்ண் நஹ்ள்ற்ங்ம் ஞல்ங்ழ்ஹற்ர்ழ்), பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளின் சிக்னல்களை ஒருங்கிணைத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும். அவற்றை ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிறப்பம்சம், எஸ்சிவி கேபிள் நிறுவனத்துக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளுக்கு தயாநிதி அழகிரி, ஜெயராமன் கமலேஷ் அளித்த பதில்:
மிகக் குறைந்த விலையில் ஏராளமான சேனல்களைத் தரமாக ஒளிபரப்பவுள்ளோம். வாடிக்கையாளருக்குப் பயனளிக்கக்கூடிய மதிப்புக் கூட்டுச் சேவைகளைக் குறைந்தக் கட்டணத்தில் வழங்குகிறோம். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ற சேனல்கள், ஜோதிடம், ஷாப்பிங், ஆன்லைன் டிக்கெட்டிங், இ-மெயில் உள்ளிட்ட பல சேவைகளை முதல்முறையாக சென்னை நகர கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
சென்னையில் குறைந்தது 20 லட்சம் இணைப்புகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் எம்.எஸ்.ஓ. வில் 84 அனலாக் மற்றும் 144 டிஜிட்டல் உள்பட 250}க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன.
எஸ்சிவி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த கேபிள் நிறுவனத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே சென்னையில் செயல்பட்டு வந்தாலும் நாங்கள் குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம், அன்பான வாடிக்கையாளர் சேவை போன்றவற்றின் மூலம் எங்களை நிலைநிறுத்திக் கொள்வோம் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காந்தி அழகிரி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தமிழரசி, எம்.எல்.ஏக்கள் ப.ரங்கநாதன், மாலைராஜா உள்ளிட்டோரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான திமுக பிரமுகர்களும்

பன்றிக் காய்ச்சலை கண்டறிய மூலக்கூறு ஆய்வகம் அமைப்பு

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலை கண்டறியும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் மின் நூலகம் தொடக்க விழா நேற்று நடந்தது. சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி இயக்குநர் விநாயகம், முதல்வர் மோகனசுந்தரம், நுண்ணுயிரியல் மைய இயக்குநர் சுமதி, மூலக்கூறு ஆய்வக தலைவர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூலக்கூறு ஆய்வகம் மற்றும் மின்நூலகத்தை திறந்து வைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில், அதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இப்போது, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.38 லட்சம் மதிப்பில் மூலக்கூறு ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாமல் உயிர்கொல்லி நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். மேலும், தொற்று நோய்களான காசநோய், மஞ்சள் காமாலையை கண்டறியலாம். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, சென்னை அரசு மருத்துவமனைக்கு மட்டும் ரூ.27 கோடியே 59 லட்சத்துக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகப் புழுக்களாக இல்லாமல், கம்ப்யூட்டர் புழுக்களாக மாறி வரும் நிலையில், 1969ம் ஆண்டு படித்த மாணவர்களின் நன்கொடை மூலம், இங்கு மின்நூலகம் தொடங்கப்பட்டது, பாராட்டுக்குரியது என்று அமைச்சர்

ப.சிதம்பரம்: மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது முழுவதும் மாநில அரசின் பொறுப்பு

புதுடெல்லி: இன்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்த அறிக்கையை மாநிலங்கவையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள£ர். அதில் தாக்குதல் சம்பவத்தன்று நடந்தவைகளை விவரித்துள்ளார். தாக்குதல் அன்று 3 சிஆர்பிஎப் வீரர்கள் தனித்தனியே தாக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் 3 வரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது முழுவதும் மாநில அரசின் பொறுப்பு என்றும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுக்கே இடமில்லை என்று மாவோயிஸ்டுகள்

மூணாறில் கோடையில் பனிமூட்டம் : சுற்றுலா பயணிகள் வருகை குறைவு




மூணாறு:மூணாறில் கடந்த 2 தினங்களாக பனிமூட்டமாகவும், சாரல் மழை அடிக்கடி பெய்தும் வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தேயிலை நகரம் என்றழைக்கப்படும் மூணாறு, கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நவம்பர் முதல் ஜனவரி வரை கடும் குளிர் நிலவும். அந்தகாலக்கட்டத்தில் தட்பவெப்பநிலை மைனஸ் டிகிரியாக இருக்கும். பிப்ரவரி முதல் மே மாதம் முதல் இளவேனில் காலத்தில் 20 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். குறைந்தபட்சம் 10 டிகிரியாக இருக்கும். மற்ற இடங்களில் அதிகப்பட்ச வெயில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவர்.ஜூன் முதல் அக்டோபர் வரை மழை காலமாகும். இந்த சீசனில் தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பெய்யும். இப்பகுதியில் வருடந்தோறும் இக்காலகட்டத்தில் சராசரி 450 முதல் 500 மிமீ அளவிற்கு மழையளவு பதிவாகும். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டிவருகிறது. சில இடங்களில் கோடை மழை பெய்கிறது. கோடைகாலத்தை இதமாக கழிக்க மூணாறு போன்ற சுற்றுலா இடங்களுக்கு அதிகப்படியான பயணிகள் அதிகமாக வருவர்.
ஆனால், இந்தாண்டில் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 2 நாட்களாக மூணாறில் மதியம் 2 மணிக்கு பிறகு பனிமூட்டமாக உள்ளது. அடிக்கடி சாரல் மழையும் பெய்து வருகிறது. இதமான சூழ்நிலை நிலவியபோதும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவன பணியாளர் ஜோன்ஸ் கூறுகையில், ‘‘பொதுவாக மூணாறில் மழை காலம் துவங்கி விட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். வியாபாரமும் மந்தமாக நடக்கும். கோடை துவங்கினால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். வியாபாரம் அமோகமாக இருக்கும். சுற்றுலா வாகனங்களும் இடைவிடாமல் சென்று வரும். ஆனால், இந்தாண்டு இதமான சூழ்நிலை நிலவுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை,’’என்றார்.

பார்லி., அருகே உண்மையில் அனல் ; டில்லி சாஸ்திரி பவனில் தீ ; திடீர் பதட்டம்



புதுடில்லி: பார்லிமென்ட் அருகே உள்ள சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பார்லி., மென்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான நேரத்தில் இங்கு ஏற்பட்டுள்ள தீ விபத்து டில்லி கூடுதலாக சூடேறிக்கொண்டது. இன்று பார்லி., இரு அவைகளும் கூடியதும் சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் , விலைவாசி உயர்வு மற்றும் சசிதரூர் மீதான ஐ.பி.எல்., பிரச்னை என சபையில் எதிர்கட்சிகள் குரல் ஓங்கி ஒலித்தன.

பா.ஜ., சார்பில் யஸ்வந்த்சின்கா மத்திய அரசையும், உள்துறையையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பத்தால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டன. மதியம் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நக்சல்கள் விவகாரம் தொடர்பாக மதியம் அறிக்கை தாக்கல் செய்தார்.



இந்நிலையில் பார்லி.,க்கு அருகே அமைந்துள்ள டில்லி சாஸ்திரி பவன் 7 வது மாடியில் இருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக் கொண்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சிறிய அளவில் தீ எரிய துவங்கியதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.



டில்லியில் தொடரும் தீ விபத்துக்கள் : மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கட்டடத்தில் மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்பட பல்வேறு துறை அலுவலகங்கள் அதிகம் உள்ளன. கடந்த 10 நாளில் டில்லியில் பல்வேறு தீ விபத்துக்கள் நடந்தவாறு உள்ளன. இதனால் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன கடந்த ஆண்டில் இதே சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 14, 2010

Tuesday, April 13, 2010

'வன்முறையை கைவிட்டு பேச மாவோயிஸ்டுகள் வர வேண்டும்'

கோல்கட்டா : 'வன்முறையை நிறுத்திவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்' என்று, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தனியார், 'டிவி' ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது: கூட்டுப் படை நடவடிக்கை முறையாகக் கையாளப்படவில்லை. அது, மே.வங்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்டுகளுக்குத் தான் உதவுகிறது. அப்படையை மாநில அரசும் ஆளுங்கட்சியும் தான் கட்டுப்படுத்துகின்றன. அப்படையின் நடவடிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டச் செயலர் தீபக் சர்க்கார் தான் முடிவு செய்கிறார்.இதுகுறித்து பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை நான் கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கூட்டுப் படை நடவடிக்கைத் துவங்கப்படும் முன் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் ஏன் கூட்டணியில் இருக்கிறோம்? மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். எங்களுக்குக் கடமை இருக்கிறது. கூட்டணியை விட்டு வெளியேறினால் மக்கள் எங்களைக் குற்றம் சாட்டுவர்.மாவோயிஸ்டுகளும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அப்பாவி மக்களைக் கடத்துவதாலும், கொல்வதாலும் என்ன பயன்? திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 1979ல் சுந்தரவனப் பகுதியின் மோரிச்ஜான்பி தீவில் நடந்த படுகொலைகள் உட்பட அனைத்து அரசியல் கொலைகளையும் விசாரிக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

கொச்சி அணியில் சசிதரூரின் வருங்கால மனைவி பங்குதாரர்?: சானியா போல அமைச்சருக்கும் நெருக்கடி

புதுடில்லி: ஐ.பி.எல்., கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வாஸ் நிறுவனம் பங்குதாரராக சசிதரூர் திருமணம் செய்யவிருக்கும் காஷ்மீர் பெண் ஒருவர் இருப்பதாகவும், இது தொடர்பாக ஐ.பி.எல்., சேர்மன் லலித்மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில் சமீபத்தில் கொச்சி , புனே அணி ஏலம் விடபட்டது. இதில் கொச்சி அணி இது வரை இல்லாத அளவிற்கு அதிகப்பட்சமாக ரூ. 1533 கோடிக்கு ஏலம் போனது. இந்த அணியில் யார் ? யார் ? பங்குதாரர்களாக இருக்கின்றனர் என லலித்மோடி ட்விட்டரில் கூறியிருந்தார். இதன் படி கிஷன் சைலந்தேர், புஷ்பா கெய்வாட், சுனந்தாபுஷ்கர், பூஜா, குலாத்தி , ஜெயந்த் கோத்தல்வார், விஷ்ணு பிரசாத், சந்தீப் அகர்வால், ஆகியோர் பெற்றிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார். இது தொடர்பான விவரம் அளிக்ககூடாது என நிர்பந்தம் தரப்படுகிறது இது என்ன காரணம் என தெரியவில்லை.

லலித்மோடி வெளியிட்டது சட்டத்திற்கு விரோதமானது : இந்த அணியின் பங்குதாரர்களில் ஒருவரான சுனந்தா புஷ்கர் காஷ்மீரை சேர்ந்தவர். இவர் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் சசி தரூர் 3 வதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் ஆவார். சுனந்தா குறித்து விஷயங்கள் வெளியிட வேண்டாம் என மத்திய அமைச்சரிடம் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என யூகங்கள் தெரிவிக்கிறது. ஏலம் நடந்தபோதும் போனில் தொடர்பு கொண்டு நெருக்கடி சசி தரூர் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய பங்குதாரர்கள் பெயரை லலித்மோடி வெளியிட்டது சட்டத்திற்கு விரோதமானது என்றும் இது குறித்து வழக்கு தொடரப்படும் என ரெண்டஸ்வாஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூர் லலித் மோடியை நிர்பந்தம் செய்தாரா இதில் இவரது பங்கு உண்டா என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்த பிரச்னை மத்திய அரசுக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி.சி.சி.ஐ., சுக்லா - சோனியா சந்திப்பு : இந்நிலையில் பி.சி.சி.ஐ., செய்தி ‌தொடர்பாளர் ராஜிவ்சுக்லா காங்., தலைவர் சோனியாவை இன்று ( செவ்வாய்க்கிழமை ) சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில் ; ஐ.பி.எல்., தலைமை குழு கூட்டம் இன்னும் 10 நாளில் நடக்கவிருக்கிறது இதில் முக்கிய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். அதே நேரத்தில் சசி தரூர் விஷயம் தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். மோடிக்கும், சசி தரூருக்கும் உள்ள விவகாரம் தொடர்பாக ஐ.பி.எல்., அணிக்கும் இடையே உள்ள பிரச்னைகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்த மாதிரியானதாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும் என்றார். வெளியுறவு துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணாவும் சோனியாவை சந்தித்து பேசினார்.

சசி தரூர் என்ன சொல்கிறார் : இந்த பிரச்னை குறித்து சசிதரூர் இன்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். கொச்சி அணி ஏலம் எடுத்தவர்களுக்கு ஊக்கமும், ஆதரவும் தெரிவித்தேன். ரெடண்டஸ்வாஸ் நிறுவனத்தில் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியும் . ஆனால் அவர்கள் எல்லோரையும் நான் சந்தித்ததில்லை. ஆலோசனை வழங்குமாறு என்னிடம் கேட்டிருந்தனர். கேரளா என்ற காரணத்தினால் நான் வழிநடத்தி சென்றேன் . சுனாந்தா புஷ்கர் எனக்கு நன்றாக தெரியும். நான் எவ்வித பிஸ்னஸ்சிலும் தலையிடுவதில்லை. நான் போனில் பேசினேன் என்பதும் தவறு . எனக்கு தேவையானவை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் தள்ளிப்போகும் ! : சசி தரூர் அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாதாரண வகுப்பு விமானத்தில் பயணிக்க வேண்டும் என பிரதமர் அலுவலக சிக்கன நடவடிக்கையை எதிர்த்து மாட்டுத்தொழுவம் என்றார். காந்தி ஜெயந்திக்கு லீவு தேவையா என்றார். இது போன்றவை தொடர்பாக சோனியா வரை சென்று சமரசம் செய்யப்பட்டது. தற்போது சசிதரூர் 3 வது திருமணம் செய்யவிருக்கும் சுனந்தாபுஷ்கர், ரெண்டஸ்வாஸ் நிறுவனத்தில் இருப்பதால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர் தான் 3 வது திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும். திருமணம் தள்ளிப்போகும் !

அமைச்சரவையிலிருந்து சசிதரூரை நீக்க வேண்டும் : பா.ஜ., : இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், சசிதரூரை பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் , இந்த விவகாரத்தில் சசிதரூர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறினார்.

சசிதரூர் விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது : காங்கிரஸ் அறிவிப்பு : ஐ.பி.எல்., கொச்சி அணி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் சசிதரூர் விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் தனது நிலையை குறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறியுள்ளது.

Monday, April 12, 2010

ஏப். 14 முதல் 17 வரை துபாயில் கல்விக் கண்காட்சி

துபாய்: துபாயில் ஜிடெக்ஸ் கல்விக் கண்காட்சி ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.துபாய் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்சிபிஷன் மையத்தில் இது நடைபெறுகிறது.இக்க‌ண்காட்சி ஏப்ர‌ல் 14 ம‌ற்றும் 15 ஆகிய‌ தேதிக‌ளில் காலை 10 ம‌ணி முத‌ல் ம‌திய‌ம் 2 ம‌ணி வ‌ரையும், மாலை 5 ம‌ணி முத‌ல் இரவு 9 ம‌ணி வ‌ரையும் ந‌டைபெறும். ஏப்ர‌ல் 16 ம‌ற்றும் 17 ஆகிய‌ தேதிக‌ளில் ம‌திய‌ம் 3 ம‌ணி முத‌ல் இர‌வு 9 ம‌ணி வ‌ரையும் ந‌டைபெறும்.இக்க‌ண்காட்சியில் சென்னை அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், பார‌தி வித்யாபீத் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ராஞ்சி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னால‌ஜி, பிருந்தாவ‌ன் க‌ல்விக் குழும‌ம், த‌த்தா மாகே இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்க‌ல் ச‌ய‌ன்ஸ், இந்திரா காந்தி திற‌ந்த‌வெளி ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ஹிந்துஸ்தான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ஜே.எஸ்.எஸ். ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌துரை காம‌ராஜ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌ஹாத்மா காந்தி ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌ணிபால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், முஹ‌ம்ம‌து ச‌த‌க் குழும‌ நிறுவ‌ன‌ங்க‌ள், சிக்கிம் ம‌ணிபால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இந்திய‌ க‌ல‌வி நிறுவ‌ன‌ங்க‌ள், அமீர‌க‌ம், க‌ன‌டா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா, லெப‌னான், ஸ்விட்ச‌ர்லாந்து, பிரான்ஸ், எகிப்து, ம‌லேசியா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்கின்ற‌ன‌

அவசர அவசரமாய் நடத்தப்பட்ட சானியா-சோயப் திருமணம்!

ஹைதராபாத்: 2 முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தான சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் இன்று திடீரென நடத்தி முடித்து வைக்கப்பட்டு விட்டது.இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ஹைதராபாத் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருப்பதாலும், அவர் மீதான ஆயிஷா தொடர்ந்த வழக்கு சட்டப்படி இன்னும் ரத்தாகாமல் இருப்பதாலும் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என ஹைதராபாத் காஜி அஸ்மத்துல்லா கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சானியாவின் செய்தித் தொடர்பாளர் ருச்சா நாயக் கூறுகையில், இன்று சானியாவின் திருமணம் நடைபெறும். இன்று பிற்பகல் 1 மணிக்கு திருமணம் தாஹ் கிருஷணா ஹோட்டலில் நடைபெறு என அறிவித்தார்.ஆனால் அதற்கு சற்று முன்பாகவே திருமணம் நடந்து முடிந்துள்ளது.தாயார் சேலையைக் கட்டி..தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. அப்போது சிவப்பு நிற சேலையில் மணக்கோலத்தில் இருந்தார் சானியா. இந்த சேலை, சானியாவின் தாயார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்யாணத்தின்போது அணிந்திருந்த திருமணச் சேலையாம்.சோயப் மாலிக் கருப்பு நிற ஷெர்வாணி அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் காணப்பட்டார்.நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.சானியா வீட்டிலிருந்து வெளியேறினார் சோயப்முன்னதாக சானியாவைத் திருமணம் செய்வதற்காக ஹைதராபாத் வந்து, சானியாவின் வீட்டில் தங்கியிருந்த சோயப் மாலிக் தற்போது அங்கிருந்து வெளியேறினார்.ஹைதராபாத்துக்கு ஏற்கனவே வந்து விட்ட சோயப் மாலிக், சானியாவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இது இஸ்லாம் அமைப்புகளின் கோபத்தை சம்பாதித்தது. இதுதொடர்பாக சன்னி உலமா வாரியம் நேற்று திடீரென சோயப், சானியா மீது பாத்வா விதித்தது.கல்யாணத்திற்கு முன்பே சோயப் மாலிக், சானியா வீட்டில் சேர்ந்து இருப்பது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இதை ஏற்க முடியாது. கண்டனத்துக்குரியது. எனவே இஸ்லாமியர்கள் யாரும் இவர்களின் கல்யாணத்திற்குப் போகக் கூடாது என்று அந்த அமைப்பு அறிவித்த்து.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சானியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்து பரவியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. சிலர் சொல்வது போல சானியா வீட்டில் சோயப் மாலிக் தங்கியிருக்கவில்லை. சில நாட்களாக அவர் அங்கு தங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.இருப்பினும் சன்னி உலமா வாரியத்தின் பாத்வாவைத் தொடர்ந்த சோயப் மாலிக், சானியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சோயப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சானியா வீட்டில்தான் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
Read:
In English இதற்கிடையே பாத்வா குறித்து அகில இந்திய சன்னி உலமா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படியெல்லாம் யாரும் பாத்வா விதிக்க முடியாது என்று தெரிவித்தார்

Sunday, April 11, 2010

கும்பமேளாவில் பங்கேற்கவில்லை: முடிவை கைவிட்டார் சோனியா



புதுடில்லி:ஹரித்துவாரில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா கைவிட்டார். தனது விஜயத்தால், பக்தர்கள் மற்றும் சாமியார்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், இந்த முடிவை எடுத்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:பல ஆண்டுகளாக நடந்து வரும் கும்பமேளா விழாவில், நமது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த புனித திருவிழாவுக்கு நான் வரவேண்டும் என, ஹரித்துவார் மக்களும், சாமியார்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.



நான் ஹரித்துவார் செல்ல விரும்புகிறேன். ஆனால், நான் சென்றால் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அசவுகர்யம் ஏற்படும். அதை கருத்தில் கொண்டே கும்பமேளாவில் கலந்து கொள்வதில்லை என, முடிவு செய்துள்ளேன்.நூற்றாண்டுகளுக்கு முன், தத்துவ ஞானிகளும், சன்னியாசிகளும் காட்டிய வழியில், மக்கள் கங்கையில் நீராடி புத்துணர்வு பெறுவர் என, நம்புகிறேன்.இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.கடந்த 2001 ஜனவரியில், அலகாபாத்தில் நிகழ்ந்த கும்பமேளாவின் போது, திரிவேணி சங்கமத்தில் சோனியா புனித நீராடினார். அதன்பின் அவர் எந்த கும்பமேளாவிலும் பங்கேற்கவில்லை.


காலாவதி மருந்து மோசடியில் மேலும் ஒருவர் கைது


சென்னை :காலாவதி மருந்து வர்த்தகம் செய்ய மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியாக இருந்த நிறுவன மேலாளரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். போலி மற்றும் காலாவதி மருந்து சப்ளை, ஐதராபாத்தில் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், ஆந்திராவுக்கு தனிப்படை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.



காலாவதி மற்றும் போலி மருந்து வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் மாறியதில் இருந்து, இதில் தொடர்புடைய பலர் தினசரி கைது செய்யப்பட்டு வேட்டை தொடர்கிறது. இந்த வகையில், நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் நேற்று, போலி டாக்டர், காஞ்சிபுரம் மருந்து விற்பனை பிரதிநிதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காலாவதி, போலி மருந்து மோசடி மன்னன் மீனாட்சி சுந்தரத்தின் மேலாளர் ஒருவரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரங்கள் இரண்டிலும் மீனாட்சி சுந்தரத்திற்கு தொடர்பு இருப்பதால், மீனாட்சி சுந்தரத்தை சார்ந்தவர்கள் அனைவர் மீதும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் நடவடிக்கை பாய்ந்து வருகிறது.மீனாட்சி சுந்தரம் நடத்தி வந்த மீனா ஹெல்த் கேர், வசந்தம் மீனா ஹெர்பல் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்புள்ளது நிரூபணமாகி வருகிறது.



சமீபத்தில், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏழு பேரை காவலில் எடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.மேலாளர் கைது: இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் தங்கள் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளனர். மீனாட்சி சுந்தரத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரின் வசந்தம் மீனா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாளரான அயனாவரத்தைச் சேர்ந்த முனுசாமி(58) என்பவரை நேற்று கைது செய்துள்ளனர்.இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இப்பதவியில் இருந்து வருவதும், பிரதீப் சோர்டியா மற்றும் சஞ்சய்குமாரின் ஜி.எச்., பார்மாவில் இருந்து மருந்துகளை பெற்று, அதை வர்த்தகத்திற்கு திருப்பியதில் முக்கிய பங்கு இவருக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.



சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரத்தில், தற்போது வரையில் 10க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புள்ள பாஸ்கரன் என்பவர் மட்டும் இன்னும் சிக்காமல் தப்பித்து வருகிறார்.இவர், தனது சொந்த ஊரான தஞ்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் தான், சஞ்சய்குமாருடன் சேர்ந்து காலாவதி மற்றும் போலி மருந்தை சந்தைப்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பிடிபடும் பட்சத்தில், இதில் தொடர்புடைய மேலும் பலர் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



மீண்டும் சிறை: இது தவிர, போலி, 'பிரிமுலேட்-என்' மருந்து வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், ஹேமந்த்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரது போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று எழும்பூர் மாஜிஸ்திரேட் ஸ்ரீதேவி முன் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.முன்னதாக இவர்களிடம் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட விசாரணையில் , ஐதராபாத் ராமுலுவுடன் தொடர்புடைய கரண்குமார் என்பவர் பற்றிய தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே ராமுலு, ஆதிகேசவன், ஸ்ரீதர் ஆகிய மூவரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் நிலையில் அந்த, 'லிஸ்டி'ல் கரண்குமாரையும் சேர்த்துள்ளனர்.அந்த விசாரணையின் போது சீனிவாசன் மற்றும் கண்ணனின் இருப்பிடங்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையில், சீனிவாசனின் லேப்-டாப், கம்ப்யூட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றில், மருந்துகள் வாங்கியது, வினியோகித்தது தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன.கண்ணன் வீட்டில் நடத்திய சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரைவில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு ஏதேனும் உள்ளதா என விசாரணையை துவக்குவர் என கூறப்படுகிறது.ஐதராபாத்தில் இருந்து போலி மற்றும் காலாவதி மருந்துகள் வந்திருப்பது தெரியவந்ததால், இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்

--------------------------------------------------------------------------------

சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் : http://www.indiadirect.com/captain
சரத்குமார் : http://www.rskworld.com
அர்ஜூன் : http://arjun.fanspace.com
பிரபு : http://www.sivaji-prabhu.com
சூர்யா : http://www.rssurya.com
விஜய் : http://www.actorvijayonline.com
விக்ரம் : http://www.chiyaanvikramonline.com
விஷால் : http://www.vishalblog.com/
அப்பாஸ் : http://www.actorabbas.com
மாதவன் : http://www.rmadhavan.com
ஜீவா : http://www.jeeva-online.com/
பிரசாந்த் : http://www.prashanthonthenet.com

நடிகைகள்

சிம்ரன் : http://www.simplysimran.com
சினேகா : http://www.priyamudansneha.com
அபிராமி : http://www.abhiramionline.com
ஐஸ்வர்யா ராய் : http://www.aishwarya-rai.com
கிரண் : http://www.kiranontheweb.com
லைலா : http://www.laila.net
மீனா : http://www.meenaonthenet.com
ஜோதிகா : http://www.jothikaonline.com
சங்கவி : http://www.sangavi.com
சுவாதி : http://www.swatheonline.com
ஷாலினி : http://www.shalinionline.com
மும்தாஜ் : http://www.mumtazonline.com
ரீமாசென் : http://www.reemasen.com
அசின் : http://www.asinonline.com
ஷெரீன் : http://www.ilamaisherin.com
நமீதா : http://www.namitha.info
மதுமிதா : http://www.madhumitha.com
நிலா : http://www.liveindia.com/meera
பூஜா : http://www.actresspooja.com/
காவ்யா மாதவன் : http://actresskavya.blogspot.com/

ŠÜ—×‘Ï °ÁÝÏ™Å Ð.14 ‚ÇÌÅ ¥ò …èã³: òºÝò

ŠÜ—×‘Ï °ÁÝÏ™Å Ð.14 ‚ÇÌÅ ¥ò …èã³: òºÝò

போலந்து அதிபர், அமைச்சர், ராணுவ தளபதி உட்பட விமான விபத்தில் 132 பேர் பலி




மாஸ்கோ: ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் போலந்து அதிபர், அவரது மனைவி உட்பட 132 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் போலந்து மக்கள் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
இரண்டாவது உலகப்போரின்போது போலந்து நாட்டு ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர், ரஷ்யாவில் உள்ள கேட்வின் நகரில் சோவியத் வீரர்களால் கொல்லப்பட்டனர். 70 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த போலந்து அதிபர் லெக் காசென்ஸ்கி (59) முடிவு செய்தார். இதற்காக அவர் தலைமையிலான போலந்து குழு நேற்று தலைநகர் வார்சாவில் இருந்து டி.யூ.&154 ரக தனி விமானத்தில் ரஷ்யா புறப்பட்டனர். அதிபரின் மனைவி மரியா, ராணுவ தலைமை தளபதி, வெளியுறவுத் துறை துணை அமைச்சர் க்ரீமர், போலந்து அரசு மத்திய வங்கி கவர்னர், அதிகாரிகள் உட்பட மொத்தம் 132 பேர் விமானத்தில் இருந்தனர்.
கடும் பனிமூட்டம்: ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க வேண்டும். அங்கு கடும் பனிமூட்டம் இருந்ததால் மாஸ்கோ அல்லது பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் விமானத்தை தரை இறக்க விமானியை ஸ்மோலென்ஸ்க் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு விமானி மறுத்துவிட்டார். இதனால், ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மரங்களில் மோதல்:விமானத்தை தரையிறக்க 3 முறை செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது முறையாக இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். அப்போது, தாழ்வாக பறந்த விமானம் மரங்களின் உச்சியில் உள்ள கிளைகள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமான நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விமானம் நொறுங்கிக் கிடந்தது.
கருகிய உடல்கள்: உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்த பிறகு, விமானப் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால், விமானப் பயணிகளில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. அதிபர் காசென்ஸ்கி, அவரது மனைவி மரியா, ராணுவ தலைமை தளபதி உட்பட 132 பயணிகளும் பலியாகிவிட்டதாக ரஷ்ய போலீசார் அறிவித்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மனித உடல்கள் கருகி சிதைந்து கிடந்தன. விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி நாசமடைந்தன. சுமார் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் பாகங்கள் சிதறி பரவி கிடந்தன.

திருச்சி இளைஞர் காங்., தேர்தலில் வேட்டி கிழிப்பு ; அடித்து விரட்டப்பட்டார் மாயவரம் எம். எல்.ஏ.,


திருச்சி : இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்தல் இன்று திருச்சியில் நடக்கிறது. காங்கிரஸ் என்றால் கோஷ்டி இல்லாமா இருக்கும் . அவரவர் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் என குமுறலுடன் இருந்த தொண்டர்கள் தங்களது கோஷ்டி கானத்தை ஆவேசமாக எழுப்பி எம். எல். ஏ., வை அடித்து விரட்டினர். எம். எல்.ஏ., தன்னை தாக்க வந்தவர்களை கல் வீசி விரட்டி தப்பினார். இதனால் அங்கு பதட்டமும் , பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.



இந்த தேர்தலை பொறுத்த மட்டில் இவர் கோஷ்டி , அவர் கோஷ்டி என பல பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். அவரவர் ஆதரவாளர்களை பதவியில் நியமிக்கும் மும்முரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுப்போட தகுதியானவர்களுக்கு விருந்து, டூர் , உ . பானம் என சரியான கவனிப்பு நடந்து வருகிறது.



ஏன் இங்கே வந்தாய் ? : இன்று தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தபோது மாயவரம் எம்.எல்.ஏ., ராஜ்குமார் அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இவரது வருகைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ., ராஜ்குமாரை நோக்கி ஏன் இங்கே வந்தாய் என கேட்டனர். தொடர்ந்து ஆவேச வாக்குவாதம் நடந்தது. இருதரப்பினரும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வேஷ்டி உருவப்பட்டது. இதனையடுத்து அவர் கல்லை எடுத்து வீசி தன்னை காப்பாற்றி கொண்டார். இதில் சீர்காழி கொள்ளிடம் வட்டார தலைவர் நடராஜன் காயமுற்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் எம்.எல்.ஏ.,வோ எனது வேட்டியை யாரும் உருவவில்லை. நான் பேண்ட் போட்டிருந்தேன் என கூறி மானத்தை தக்க வைக்க முயற்சித்தாராம் . இதனை அக்கம், பக்கம் இருந்தவர்கள் நகைப்புடன் தெரிவித்தனர்.



ராகுல் முழு அக்கறை : இந்த தேர்தலை பொறுத்த மட்டில் அகில இந்திய பொதுசெயலர் ராகுல் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் முறைகேடுகள் இல்லாமல் நடக்க வேண்டும் என கூறி திருச்சி தேர்தல் பணிகள் தொடர்பாக நேரில் விசாரித்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த மோதல் சம்பவம் ராகுல் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். காங்கிரஸ் என்றால் கோஷ்டி கானம் இல்லாமலா ?







ஓட்டு யார் போடுவர் ? : தமிழகத்தில் இளைஞர் காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடந்தது. அதில் 14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்டோரில் 12 லட்சத்து 50 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு கிளை, வட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் சட்டசபை அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிணைந்து இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு மாநில நிர்வாகிகளையும், தலைவரையும் மற்றும் 39 எம்.பி., தொகுதிகளின் பொறுப்பாளர்களையும் தேர்வு செய்யவேண்டும்.







அதற்காக தேர்தல் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) திருச்சி காஜாமலையில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த தேர்தலில் 4,280 பேர் ஓட்டளிக்கும் தகுதி பெற்றவர் ஆவர் . தேர்தலுக்காக ஏற்பாடுகளை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜோஷி, தமிழக பொறுப்பாளர் சூரஜ், திருச்சி எம்.பி., தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முரளிஷெட்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் செய்து வருகின்றனர்.