Monday, April 19, 2010

'லெட்டர் பேடு' சர்ச்சையில் 'மாஜி' அமைச்சர்

ராமநாதபுரம் : அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலகத்தின் முகவரி அச்சிட்ட 'லெட்டர் பேடு' உபயோகிப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராகவும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் தற்போது உள்ளார். ராமநாதபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட, உள்ளூர் இதழ் ஒன்றில், இவரது வாழ்த்து மடல் இருந்தது. இதில் , தமிழக அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலக முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், '' அரசு 'லோகோ' வை பயன்படுத்துவதில் வரைமுறை உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் அதை பயன்படுத்த அனுமதியில்லை. சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அன்வர்ராஜாவிடம் கேட்ட போது,'' எனது பழைய லெட்டர் பேடில் எழுதி தந்ததை, அந்த இதழினர் அப்படியே பிரசுரித்துவிட்டனர். அதில் அரசு லோகோ வெளியிட்டது தவறுதான்,'' என்றார்.

No comments:

Post a Comment