சென்னை, ஏப்.14: ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அவற்றை மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த மறைமலை நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், "அம்பேத்கர் சுடர்' விருதைப் பெற்ற பிறகு, முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:
இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதுகள் தனிப்பட்ட விருதுகள் என்ற போதும், எல்லாமே "ஒளி'மயமான விருதுகள்; சிறப்பான விருதுகள்.
விருதுகளை வழங்கிய திருமாவளவன், இங்கே சில கோரிக்கைகளை வைத்தார்.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், அவை குறித்து எதுவும் அறிவிக்க இயலாது. ஆனால், எனது தலைமையில் 6}வது முறையாக ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம் என்று திருமாவளவன் கூறினார். அத்தகைய ஆட்சி அமையும் போது உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
அதற்கு முன்னதாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இவை இடம்பெறும்.
இங்கே பேசிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எனக்குப் பிடித்த கருத்தைச் சொன்னார்.
நீதிபதி ஒருவர், ஏழைகள் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி அவர்களை விரட்டியதாக அவர் தெரிவித்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு இன்னொன்றையும்
நினைவுபடுத்த விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் ஒருவர் சிறுதாவூரில் பஞ்சமி நிலங்களை அபகரித்து வீடு கட்டியதாகப் புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு, அந்தக் கமிஷன் தனது அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அது நீதிபதியாக இருந்தாலும், முன்னாள் முதல்வராக இருந்தாலும் அந்த நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பாயில் படுத்து உறங்க முடியாத நிலையில் உள்ளது என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த நிலை மாறுவதற்காகத் தான் தி.மு.க. பாடுபடுகிறது. அதற்காகத்தான் தி.மு.க.வோடு திருமாவளவன் கைகோர்த்திருக்கிறார். வெள்ளையர்களிடம் விடுதலைப் பெற்ற நாம், இதுபோன்ற சமூகப் பிரச்னைகளிலிருந்து நிச்சயம்
விடுதலை பெறுவோம் என்றார் கருணாநிதி.
விழாவுக்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:
வீரன் சுந்தரலிங்கம், அயோத்திதாசர் ஆகியோருக்கு அரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும்; காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க வேண்டும். அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்.
அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு "பெரியார் ஒளி' விருதும், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு "காமராஜர் கதிர்' விருதும், கவிஞர் அப்துல் ரகுமானுக்கு "காயிதே மில்லத் பிறை' விருதும், தமிழறிஞர் மறைந்த தேவநேயபாவாணர் சார்பில் அவரது மகன் மணிக்கு "செம்மொழி ஞாயிறு' விருதும், ஞான அலாய்சியஸýக்கு "அயோத்திதாசர் ஆதவன்' விருதும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருதை வழங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். உடன் (இடமிருந்து)
அயோத்திதாசர் - ஆதவன் விருது பெற்ற ஞான.அலாய்சியஸ், காமராசர் கதிர் விருது பெற்ற கிருஷ்ணம்மாள்

No comments:
Post a Comment