Sunday, May 16, 2010

வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : சிங்கமுத்து கைது


Updated 5/16/2010 5:51:01 PM


நடிகர் வடிவேலு, தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்து 7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் சிங்கமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

No comments:

Post a Comment