Saturday, June 5, 2010

கருணாநிதி பிறந்தநாள் விழா: 3 அரசு கல்லூரி விடுதிகளுக்கு கம்ப்யூட்டர்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முதல்-அமைச்சர் கருணாநிதியை கவிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பாடி, பாராட்டி போற்றும் விழா சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் காமராஜர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டைரக்டர் பாலசந்தர் தலைமை தாங்கினார். திரைப்பட பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி முதல்-அமைச்சர் வாழ்த்து பாடல் பாடினார்.

நிகழ்ச்சியில் துணை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ராயபுரம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 5 கம்ப்யூட்டர்கள், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதிக்கு 3 கம்ப்யூட்டர்கள், நந்தனம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைக்கு 3 கம்ப்யூட்டர் களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை படைத்த மாற்றுதிறனாளி மாணவி பாண்டீஸ்வரி, பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த லெட்சுமணன், சரவணன் ஆகியோருக்கு லேப்-டாப்களையும் வழங்கினார். மாணவர் வெங்கடவரதனுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அஞ்சுகம் அம்மையார் வெண்கல சிலையை மு.க.ஸ்டாலினுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

விழாவில் கவிபேரரசு வைரமுத்து பேசியதாவது:-

கலைஞரின் பிறந்த நாள் உழைக்கும் மக்களின் தீபாவளி, உழவர்களின் பொங்கல் திருநாள், ஆண்டுக்கு ஆண்டு தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை இதுதான்.

சரியான தலைவரை நாம் பெற்று இருக்கிறோம். நல்ல தலைவர் கிடைத்ததால் நாடு நன்றாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திண்டுக்கல் லியோனி, சாரதா நம்பி ஆரூரன், முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷணன் ஆகியோர் முதல்-அமைச்சரின் இலக்கிய சாதனை, வரலாற்று சாதனை, ஆட்சி சிறப்புகளை பற்றி உரையாற்றினார்கள்.

நகைச்சுவையும், இலக்கியமும் கலந்து அறிஞர்கள் கலைஞரின் பெருமைகளை எடுத்துரைத்ததை விழா முடியும் வரை சுமார் 2 மணி நேரம் முன்வரிசையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் ரசித்தார்.

விழாவில் அமைச்சர் மைதீன்கான், சுகவனம் எம்.பி., சைதைகிட்டு, வக்கீல் ஸ்ரீதரன், தாயகம் கவி, சைதை நாகராஜன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment