அபுதாபி: உடல்நலக்குறைவு காரணமான ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய இந்தியா வரவுள்ளனர். இதற்கு அபுதாபியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் முழு ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின் தரம் உலக அளவில் சிறப்புற்று இருப்பதாகவும் , டாக்டர்கள் மற்றும மருத்துவ நிர்வாகத்தினர் அணுகுமுறை மிக மென்மையாக இருப்பதாகவும் வெளிநாட்டினர் உள்ளார்த்தமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
பாகிஸ்தான், ஈரான், ஈராக் , வங்கதேசம் , கொழும்பு என அருகில் உள்ள நாட்டினர் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவது வழக்கமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் ஈராக்கில் இருந்து 57 குழந்தைகள் இந்தியா வந்து சிகிச்சை பெற துபாயில் இருந்து புறப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் ஒன்று முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடன் துணைக்கு பெற்றோர்களும் அழைத்து வரப்படுகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் : தாரிக் அல் சுக்கூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆப்ரேஷன் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அபுதாபியில் செயல்படும் இந்த அமைப்பின் நிறுவனர் அயாத்அப்பாஸ் கூறுகையில்;
இது வரை 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து நலம் பெற ஏற்பாடு செய்துள்ளோம். வளைகுடா நாடுகளில் மட்டும் 85 குழந்தைகள் அடங்குவர். ஈராக்கில் உள்ள குழந்தைகள் 57 பேர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் பெங்களூரூ நகரில் உள்ள நாராயணா ஹிருதாயலயா குழந்தைகள் இதய சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர் .
இதில் அதிகம் இருதயம் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஒரு சிலருக்கு கண் தொடர்பான சிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு குறையாமல் இந்தியாவில் தங்க வேண்டியது இருக்கும்.
வெற்றிகரமாக திரும்புவோம் : பாக்தாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி கண்பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லை. அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வெற்றிகரமாக திரும்புவோம் என நம்புவதாக கூறினார். சிகிச்சைக்கு அழைத்து வரவுள்ள குழந்தைகள் பெரும்பாலும் சத்துக்குறைந்ததாகவும் இதயத்தில் அடைப்பு ஏற்பபட்டதாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
பிற நாட்டு குழந்தைகள் இந்தியாவில் வந்து நலம் பெற்று செல்ல நாமும் மனதார வாழ்த்துவோம் !
No comments:
Post a Comment