புதுதில்லி, நவ.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சனிக்கிழமைக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வழக்கில் அரசின் சார்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். சனிக்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி விரும்பினால் அவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம். திங்கட்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:
Post a Comment