ராமநாதபுரம், நவ. 17: ராமநாதபுரம் இந்திரா நகரில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸôர் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவரது கணவரை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி பாலம்மாள் (38).
இருவரும் கட்டடத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளிகள். சம்பவ நாளன்று மனைவி பாலம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இறந்து கிடந்தார். ஆனால் கணவரைக் காணவில்லை.
சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கணவரே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸôர் விசாரணை செய்து அவரையும் தேடி வருகின்றனர்
No comments:
Post a Comment