விழுப்புரம் : ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்., கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது. உழைத்தால் தான் எதையும் பெற முடியும். உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள தி.மு.க.,வினர் ஐந்து மாதங்கள் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற நினைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நம்முடைய வரிப் பணத்தை வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதி ஆட்சியில், வெங்காயம் என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இலவசம் வழங்கும் கருணாநிதியால் நமக்கு இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் லோக்சபா கூட்டு குழு விசாரணைக்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.
நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எந்த கட்சியிலிருந்தும் வரவில்லை. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன். ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருந்த டாஸ்மாக் கடையில் தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால், இலவசங்களை தாராளமாக வாரி வழங்குகின்றனர். பொங்கல் விழாவிற்கு அனைவரின் வீடுகளிலும் எண்ணெய் விளக்கேற்றினால் மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும். ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை. கருணாநிதியிடம் ஒரே ஒரு முன்னேற்றம் என்றால் முன்பெல்லாம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவார், தற்போது தந்தி அனுப்புகிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதற்கு பதிலாக லஞ்சம், ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம். மின் வசதி இல்லாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் வழங்கி பயனில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
காவல் துறையினரை இந்த ஆட்சி ஏவல் துறையாகப் பயன்படுத்துகிறது. போலீசார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஆட்சியாளர் களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவேன். பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்., கூட்டணி நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.
Sunday, January 16, 2011
Monday, January 10, 2011
2001ல் இருந்து தொலை தொடர்பு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படும்: சி.பி.ஐ. அறிவிப்பு
புதுடெல்லி, ஜன. 4 -
உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
குற்றவாளிகளின் பெயர் தெரியாததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்றும் விசாரிப்பதாக சி.பி.ஐ. வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரமோத் மகாஜன், அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகிய முன்னாள் தகவல் தொலை தொடர்பு அமைச்சர்கள் நடத்திய சந்திப்புகள், ஒப்பந்தக் கூட்டங்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது.
கோப்புகளில் உள்ள ஆவணப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரதி, வோடபோன், ஐடியா ஆகிய ஒப்பந்ததாரர்கள் அதிக பயனை அடைந்துள்ளனர். ஒப்பந்தங்கள் பெற்ற 50 நிறுவனங்களையும் விசாரிக்கப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16- ந் தேதி உச்சநீதிமன்றம் 2001 - 2007 வரை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் யார் யாருக்கு ஒப்பந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வருகிற பிப்ரவரி 10- ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஆணை பிரப்பித்துள்ளது. மேலும் தொலை தொடர்பு ஒப்பந்தங்களால் ஏற்பட்ட இழப்பையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் சி.பி.ஐ. தன் விசாரணையை வேகப்படுத்தியுள்ளது.
இதுபற்றி முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் அருண் சௌரி கூறுகையில்: உச்சநீதிமன்றம் ஏன் விசாரணையை 2001 வரை நீடித்துள்ளது என்று குழப்பமாக உள்ளது என தெரிவித்தார்.
அருண் சௌரி பா.ஜனதா ஆட்சியில் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தகவல் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.ராசா மீது புகார்: சுப்பிரமணியசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்; டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி
புதுடெல்லி, ஜன. 7-
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்பிர மணியசாமி கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்றுக் கொண்டு ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்ட விதிப்படி என்னை அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக நியமித்து வாதாட அனுமதிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் என்னை விசாரணைக்கு உதவியாக அமர்த்திக் கொள்ள உத்தர விட வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. நீதிபதி பிரதீப் சத்தா இதை விசாரித்தார்.
அப்போது சுப்பிரமணிய சாமியும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி பிரதீப் சத்தா “இந்த வழக்கில் நீங்கள் புகார்காரராகவும், அரசு வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட நினைக்கிறீர்கள். இதற்கு அனுமதிக்க முடியாது என்றார். அதற்கு சுப்பிரமணியசாமி நான் இரட்டை வேடம் போட அனுமதி கேட்கவில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை புகார்காரர் என்ற முறையில் முதலில் சில சாட்சியங்களை சொல்ல விரும்புகிறேன். அதன் பின்னர் குற்றம் செய்தவரிடம் நடக்கும் கோர்ட்டு விசாரணைக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காகத் தான் அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக என்னையும் நியமிக்கும்படி கேட்கிறேன்” என்றார்.
அதற்கு நீதிபதி பிரதீப் சத்தா, “உங்கள் வழக்கு தொடர்பாக புகார் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கும். நீங்கள் உங்கள் சாட்சியங்களை கோர்ட்டில் அளிக் கலாம். அது பதிவு செய்து கொள்ளப்படும். அதை தொடர்ந்து விசாரணை நடக்கும் மற்ற விஷயங்கள் அடுத்த கட்டங்களாக எடுத்து கொள்ளப்படும்” என்றார்.
ஸ்பெக்ட்ரம் பற்றிய கருத்து சரியல்ல கபில் சிபல், தணிக்கை அறிக்கையை கவனமாக படிக்க வேண்டும்; பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கண்டனம்
கவுகாத்தி, ஜன.9-
மத்திய மந்திரி கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும் என்று பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதுபற்றி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் நேற்றுமுன்தினம் பேட்டி அளித்தார்.
அப்போது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், யூகத்தின் அடிப்படையிலான அவரது மதிப்பீடு முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரணை நடத்தி வரும் பொது கணக்கு குழுவின் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஜோஷி கூறியதாவது:-
கபில்சிபல் கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை மிகவும் சாதாரணமாக அணுகி இருக்கிறார். அவர் அந்த அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும். தணிக்கை அதிகாரி, 3 விதமான வழிமுறைகளில் நஷ்டத்தை மதிப்பிட்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. அதுதான் துல்லியமானது, இறுதியானது என்று தணிக்கை அதிகாரி சொல்லவில்லை. இழப்புத்தொகை, யூகத்தில் அடிப்படையிலானது என்றுதான் அவர் எப்போதும் கூறி வந்திருக்கிறார்.
பொது கணக்கு குழு முன்பு, தொலைத்தொடர்பு செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆஜரானபோது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என்று ஒருபோதும் சொல்லவில்லை. பொது கணக்கு குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, கபில் சிபல் இதுபோல சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைத்தொடர்பு செயலாளரை பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைத்து, அவர் மூலமாக சொல்லலாம். கபில் சிபலின் கட்சியான காங்கிரசும் தனது கருத்துகளை பொது கணக்கு குழுவிடம் சொல்லலாம்.
இவ்வாறு ஜோஷி கூறினார்.
ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
புதுடெல்லி, ஜன 10-
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை குழு கூறியது.
இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று மீண்டும் அதன் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி ஏ.கே. கங்குலி ஒதுக்கீடு பெற்ற டாடா டெலி சர்வீஸ், ஷியாம், வீடியோகான், எடிசலாட், யுனினார், புஷ்நெட், வோடா போன் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
இதே போல் மத்திய அரசு மற்றும் மத்திய டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
Sunday, January 9, 2011
ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்
நாகர்கோவில் : ""தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட, அய்யா வழி பக்தர்கள் துணை நிற்க வேண்டும்,'' என, கன்னியாகுமரி சாமித் தோப்பில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து காரில் சாமித் தோப்பு வந்த ஜெ.,க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலின் பள்ளியறையில் சாமி தரிசனம் செய்தார்.அங்கு, அவருக்கு வழங்கப்பட்ட நாமத்தை நெற்றியில் பூசிக்கொண்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கொடிமரம் முன் நின்று வழிபட்டார். கோவிலில் கோசாலையை துவக்கி வைத்து பசு, கன்றுக் குட்டியை தானமாக வழங்கினார். அவற்றிற்கு வாழைப்பழங்களை கொடுத்தார்.
பின்னர், மேடையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், நிதியுதவிகளை உதவிகளை வழங்கி பேசியதாவது: விண்ணுலகும், மண்ணுலகும் வியக்கும் வகையில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர் பதி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னையே அர்ப்பணித்த வைகுண்டபதிக்கு என்னை அழைத்த தலைமை குரு பாலபிரஜாபதிஅடிகளாருக்கு நன்றி.தீண்டாமையை வேரோடு ஒழிக்கவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், சமபந்தியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், சுயமரியாதைக்கு வித்திட்டவரும், சமூக நீதிக்காக போராடியவரும், தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அற்புதமான மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அவரை தமிழ் சமூகம் என்றென்றும் நினைவு கூறும். அய்யா வழி வழிபாட்டில் உருவம் கிடையாது. கண்ணாடி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கண்ணாடியில் தூசு படிந்தால் நமது பிம்பம் பிரதிபலிக்காது. அதே போல பொது வாழ்க்கையில் தூசுபடியாமல் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கி, தர்மம் குன்றும் போது அவதார புருஷர்களாக, இறைவன் தோன்றுவது வழக்கம்.அதைப் போல, இந்த கலியுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே அவதரித்தவர், அய்யா வைகுண்டர். தர்மம் என்றால் அறம் என்று பொருள். பிறருக்கு உதவும் மனித நேயத்தை விதைத்தவர் அவர். ஆனால், நாட்டு மக்களை சுரண்டி சேர்த்தப் பணத்தில், தம் வாழ் நாளில் ஒரு விழுக்காட்டை கூட கொடுக்க மனமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு பன்றி, ஒரு பசுவிடம் நியாயம் கேட்டது. "என்னை கொன்று இறைச்சியை உண்கிறார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் போது என்னை புறக்கணிக்கிறார்கள். உன்னை மட்டும் வழிபடுகிறார்களே', என கேட்டது.அதற்கு பசு,"எனக்கும் உனக்கும் வேறுபாடு உள்ளது. நான் உயிரோடு இருக்கும் போது மக்களுக்கு பால், தயிர்,வெண்ணெய் வழங்குகிறேன். நீ செத்த பிறகு தான் இறைச்சி தருகிறாய்,' என கூறியது. செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும்.இன்றைக்கு கொலை, கொள்ளை, சுரண்டல், கற்பழிப்பு, சூழ்ச்சி போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, தர்மத்தை நிலை நாட்ட எனக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைய துணை நில்லுங்கள்.அய்யா வைகுண்டபதியின் நிலம் வேலியிடப்பட்டிருப்பதாக, பால பிராஜபதி அடிகள் தெரிவித்தார். அய்யா வைகுண்டரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால், எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும். இந்த தேர்தல் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் தேர்தல். வைகுண்டர் அருளால் கழக ஆட்சிஅமைந்தால், மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்
சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின்போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை கண்டித்து எதிர்கட்சியினர் சபாநாயகரை கேலி செய்யும் விதமாக நாற்காலியில் அமர்ந்து கேலி செய்தனர்.
கவர்னர் உரையில் கூச்சல் - குழப்பம் : 7ம்தேதி நடந்த சட்டசபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் , குழப்பம் நிலவியதால் இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.,க்களை சபையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர்உத்தரவிட்டடார்.
குண்டு கட்டாக வெளியேற்றும் போது அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் காவலர்களை அடிக்க பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவை முன்னவர் தீர்மானம் : இன்று (திங்கட்கிழமை) அவையில் கவர்னர் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கவர்னர் உரையின்போது அவைக்காவலர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சரும், அனை முன்னவருமான அன்பழகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சபாநாயகர் ஆவடையப்பன் அ.தி.மு.க., வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் 9பேர் யார் ? : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டுரங்கன், டி.ஜெயக்குமார், வேலுச்சாமி, திருத்தணி ஹரி, ரவிச்சந்திரன், எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி், செந்தில் பாலாஜி, சீனி சண்முகம் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவவடிக்கையில் பங்கேற்க முடியாது.
தர்ணா போராட்டம் : சஸ்பெண்ட் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். தொடர்ந்து வெளியேறிய எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சபாநாயகரை கிண்டல் செய்யும் டிராமா: தர்ணாவிற்கு பின்னர் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் சபாநாயகர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை கேலி செய்யும் விதமாக எம்.எல்.ஏ.,க்கள் நடித்துக்காட்டினர். சேரில் ஜெயக்குமார் ( சபாநாயகர் போல் ) அமர்ந்து கொள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட பின்னர் பதில் கூற என நடித்து அனைவரும் கைத்தட்டி சிரித்து ரசித்துக்கொண்டனர். மேலும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்வது போலவும் நடித்துக்காட்டினர்.

தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்
சேலம்: "தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்' என தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து தொழில்களும் மந்தமடைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போல சிக்கி தவிக்கின்றனர். இதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.
நூல் விலையேற்றத்தால் நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் முடிங்கியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி, கைத்தறி மற்றும் விசைச்தறித் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இடைத்தரகள் அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இப்பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில், தமிழக முதல்வரின் வேஷத்தை களைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும்.
பன்னாட்டு கம்பெனிகளுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மின் விநியோகத்தை தடை செய்வதை கண்டனத்துக்கு உரியது. கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்ததை கண்டிக்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே இந்திய வந்த போது, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கிய மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஆக்டோபஸ் போல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பம் ஆட்கொள்வதை கண்டித்து மக்களை கூட்டி போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் உள்பட மக்கள் பிரச்னைகளை தி.மு.க., நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் தலையீடு இன்றியும் விசாரித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழியையும், ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தே.மு.தி.க., மாநாட்டு துளிகள் : சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து விழா மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தது.
சென்னை, கோவை, பாண்டிச்சேரி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்துக்கு 1200 கி.மீ., தூரத்துக்கு தே.மு.தி.க., வினர் விஜயகாந்த்தின் கட்-அவுட்டை வைத்திருந்தனர். இத்தகவல் மாநாட்டு மேடையில் தெரிவிக்கப்பட்டது.
சாலையில் ஏற்பட்ட டிராஃபிக்ஜாம் மற்றும் மாநாட்டு திரளை தொண்டர்கள் தங்கள் மொபைல்ஃபோனில் ஆர்வமுடன் படம் பிடித்தனர்.
தே.மு.தி.க., சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில நிர்வாகிகள் கெடுபிடி செய்ததால் தொண்டர் படையினர் அவர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கு திரளான தொண்டர்கள் விழா மேடைக்கு வந்தனர்.
கட்சி நிர்வாகிகளுக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க., பெண் தொண்டர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விழாவில் திரளான அரவாணிகள் பங்கேற்றனர்.
பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை அனுப்புவதற்கு வசதியாக "நெட்' வசதி செய்யப்பட்டிருந்தது.
மாநில கலை இலக்கிய அணி சார்பில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான தொண்டர்கள் மேள, தாளத்துடன் ஆர்ப்பரித்தவாறு வாகனங்களில் வந்தனர்.
மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வெளியில் இருந்து மாநாட்டு மேடைக்கு விஜயகாந்த் இரவு 7.25 மணிக்கு நடந்து வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.
மாநாட்டில் 10 நிமிடம் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாடு துவங்கிய அரை மணி நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தனர்.
ஜெயா டிவி காமிரா மேன் ரியாசுதீன் மற்றும் கட்சி தொண்டர் இருவர் உள்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்துக்கு நிருபர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வீசிய ஒரு ஆசாமி பிடிபட்டான். ஆனால், கல்வீச்சு சம்பவம் நின்றபாடில்லை.
மாநாட்டில் தொண்டர் படையை சேர்ந்த அனைவருக்கும் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டிருந்தது.
தொண்டர்கள் பார்வையிடுவதற்காக இரண்டு மெகா சைஸ் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டு திடலின் மூன்று இடங்களில் தேர்தல் நன்கொடை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.
குறைவான அளவு போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருவள்ளுர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
விஜயகாந்துக்கு வெள்ளி செங்கோல், தங்க நிற செங்கோல், வீரவாள், முரசு சின்னம் உள்ளிட்டவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்
எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்.
"மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதில், கட்சி நிர்வாகிகள் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் சில விளம்பரங்கள் வெளிவந்துள்ளதாக விஜயகாந்த் நேற்று திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் தே.மு.தி.க., சார்பில் நடக்கும் மாநாட்டை ஒட்டி, கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து வருகின்றனர். தமிழகத்தில், நடந்து வரும் மோசமான கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், 7ம் தேதி (நேற்று முன்தினம்), மாலை நாளிதழ் ஒன்றில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கும், அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஏற்கனவே ஊழலில் திளைக்கும், ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு நச்சு நினைப்போடு, இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நயவஞ்சக நரிகளுக்கு சரியான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்ட உள்ளனர்.
இந்த விஷமிகள் வேண்டும் என்றே வெளியிட்ட விளம்பரத்தை, அந்த பத்திரிகை ஏன் வெளியிட்டது என எங்களுக்கு புரியவில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகளான, கட்சி கொள்கை பரப்பு செயலர் வி.சி. சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகப் பகுதி செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில், இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால், இந்த அற்ப காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், இதை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த அணி அமையாமல் இருக்க ஆளுங்கட்சி சதி செய்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி.மு.க., ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது' என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சியின் நிலை என்ன என்பதையும் மாநாட்டுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Subscribe to:
Posts (Atom)